உலக சமுதாய சேவா சங்க மண்டல ஆலோசனை கூட்டம்.

உலக சமுதாய சேவா சங்க மண்டல ஆலோசனை கூட்டம்.
உலக சமுதாய சேவா சங்கத்தின் சேலம் மண்டல ஆலோசனை கூட்டம் ராசிபுரம் ஆண்டகளூகேட் காசி வினாயகர் ஆலய இயற்கை நலவாழ்வு மைய வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சேவா சங்கத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி, தியான பயிற்சி கிராமப்புற மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.கே.மயிலானந்தம் தலைமை வகித்து ஆலோசனை வழங்கிப் பேசினார். இதில் பேசிய அவர் உலக அமைதி வரவேண்டுமெனில் தனி மனித அமைதி முக்கியம். இதற்கு தனி மனிதன் ஒருவருக்கும் உலக சமுதாய சேவா பயிற்சி பெற வேண்டும். உயிர் ஆற்றல் பெற காயகல்ப பயிற்சி போன்றவற்றை பெற மக்களுக்கு அளிக்க வேண்டும் என்றார். முன்னதாக இதில் காசி விநாயகர் ஆலய நல்வாழ்வு மையத் தலைவர் கே.கந்தசாமி வரவேற்றுப் பேசினார். ஒய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் மு.ஆ.உதயகுமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இதனையடுத்து எஸ்.கே.மயிலானந்தம் செய்தியாளர்களிடம் பேசியதாவது: உலக சமுதாய சேவா சங்கம் வேதாத்திரி மகரிஷியால் 1958-ம் ஆண்டு சென்னை கூடுவாஞ்சேரியில் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் தனி மனித அமைதி, குடும்ப அமைதி, உலக அமைதி. இந்த நோக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் தனி ஒருவரால் துவங்கப்பட்ட இந்த சங்கம், பயிற்சியின் மேம்பாட்டினால், இன்று 397 அறக்கட்டளைகள், 209 அறிவுத்திருக்கோவில்கள், இதனை சார்ந்த 2 ஆயிரம் தவமையங்கள் செயல்பட்டு வருகின்றன. கிராமப்பகுதியில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற 17 நாடுகளில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது. மகரிஷி வேதாத்திரி மறைவிற்கும் பின் அவரது தத்துவம், பயிற்சியின் மேன்மையால் 500 மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. படித்தவர்கள், படிக்காதவர்கள், கிராமப்புற மக்கள் என பலரும் பயன்பெற்றுள்ளனர். கல்விக்கூடங்கள், கல்லூரிகளில் பல்கலைக்கழக்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, சுமார் 2 லட்சத்து மேற்பட்டோர் பயிற்சி பெற்று பயிற்சி பெற்றுள்ளனர். பிஏ., பிஎஸ்சி, பிஎச்டி., என 200 ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட இதுவரை 35 ஆயிரம் முடித்துள்ளனர். இந்த படிப்பு பாரதியார், பாரதிதாசன் போன்ற பல்கலைக்கழகத்தில் உள்ளது. கிராமத்தை தத்து எடுத்து ஆசிரியர்கள் தங்கியிருந்த ஆறு மாதம் பயிற்சி இலவசமாக தியானம், காயகல்பம், அகத்தாய்வு, இறை ஞானம், பிரம்மஞானம் போன்ற உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 316 கிராமங்களில் இப்பயிற்சி முடிக்கப்பட்டுள்ளது. இதில் லட்சக்கணக்கானோர் பயன்பெற்றுள்ளனர். இதுவரை 50 லட்சம் பேருக்கு காயகல்ப பயிற்சி, 2 லட்சம் பேருக்கு இறைஞான பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. 17 மண்டலங்களாக பிரித்து செயல்பட்டு வரும் இதில் 17 ஆயிரம் ஆசிரியர்கள் பயிற்சியளித்து வருகின்றனர். இன்று மக்களிடம் இறை பக்தி அதிகம் உள்ளது. இறை ஞானத்துடனான இறை பக்தி இருந்தால் மக்களுக்கு அவர்கள் பயனுள்ளவர்களாக இருப்பார்கள். மக்களுக்கு தீங்கு விளைவிப்பவர்களாக இருக்க மாட்டார்கள்.எனவே தான் இந்த இறை ஞானம் குறித்து பயிற்சியளிக்கும் பணியில் உலக சமுதாய சேவா சங்கம் இயங்கி வருகிறது என்றார். இக்கூட்டத்தில் சேலம் மண்டலத் தலைவர் உழவன் ம.தங்கவேல், சங்கத்தின் இணை இயக்குனர் அருட்செல்வி, ராசிபுரம் மனவளக்கலை மன்ற பேராசிரியர் எம்.செளந்திரராஜன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று பேசினர்.

Tags

Next Story