உலக மாற்றுதிறனாளிகள் தினம்; மாணவிகள் உறுதிமொழி
உலக மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.
உலக மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு வேற்றுமையை ஒழிப்போம் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
உலக மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு வேற்றுமையை ஒழிப்போம் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2023-24, உள்ளடங்கிய கல்வி திட்டத்தின்கீழ் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்-3 ல் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 04.12.2023 அன்று காலை வழிபாட்டு கூட்டத்தில் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து செய்தல், ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழி ஏற்றல், மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகிய செயல்பாடுகளை மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் சார்ந்த விழிப்புணர்வை பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படுத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இன்று திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் து.கணேஷ்மூர்த்தி, உள்ளடங்கிய கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அ.சங்கர், பி.சின்னராஜ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஹெலன்கிரேஸி, பள்ளி தலைமையாசிரியர் ஜோதிலட்சுமி, ஆசிரியர் பயிற்றுநர் பி.தண்டபானி மற்றும் சிறப்பு பயிற்றுநர்கள் ஒய்.சந்திரசேகர், ஆனந்தி மற்றும் சத்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story