உலக போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூரில் காவல்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் வருவாய் துறை இணைந்து, உலக போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி, ஜூன் 26ம் தேதி காலை 10:30 மணி அளவில், தொடங்கி நடைபெற்றது, பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இருந்து, பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கற்பகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்,

இப்பேரணி மாதகோபாலபுரம், வெங்கடேசபுரம், சங்கு, கடைவீதி வழியாக பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது, பேரணியில் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கோஷமிட்டும், விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். பேரணிக்கு முன்பாக போதைப் பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழிகளை மாவட்ட ஆட்சியர் வாசிக்க அதனைத் தொடர்ந்து அனைவரும் வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாமளாதேவி, உள்ளிட்ட கல்வித்துறை வருவாய்த்துறை சேர்ந்த அலுவலர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி, செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story