உலக பூமி தினம் விழிப்புணர்வு

நாமக்கல்லில் உலக பூமி தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
1970 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், பூமி மாசுபடுவதை குறைக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் உலக நாடுகள் முழுவதும் “உலக பூமி தினம்” விழா கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில் உலக பூமி தினம் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வீ. இந்திரகுமாரி பூமியினை நாம் எவ்வாறு பாதுகாத்து கொள்வது மற்றும் மரம் நடுதலின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார். உலக வெப்பமயமாதலை தடுக்க மரக்கன்றுகளை நடுவோம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் தரப்பட்டது. பூமியை பாதுகாப்போம், இயற்கை வளங்களை பாதுகாப்போம், மரக்கன்றுகளை நடுவோம் என மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story