அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினவிழா!
மீண்டும் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு
கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த உலக சுற்றுச்சூழல் தின விழாவில் நெகிழி பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பரிமளம் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில் கலந்து கொண்டு, பூமி உயிர்க் கோளமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு உதவிப் பொறியாளர் வெங்கடசுப்பிரமணியன் கலந்துகொண்டு, நெகிழி பயன்பாட்டை குறைக்க வலியுறுத்திப் பேசினார். நிகழ்வில் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. முன்னதாக, ஆசிரியர் தங்கம் வரவேற்றார். முடிவில், பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாசிரியர் சோலைமுத்து நன்றி கூறினார்.
Next Story