அரசு அருங்காட்சியகத்தில் உலக சுற்றுச்சூழல் தின போட்டிகள்
கன்னியாகுமரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
கன்னியாகுமரி அரசு அருங்காட்சிய காப்பாட்சியா் சிவ சத்தியவள்ளி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:- கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் வரும் 15ஆம் தேதி காலை 10 மணிக்கு சுற்றுச்சூழல் தினம் குறித்த ஓவியப்போட்டி நடைபெற உள்ளது. ஐந்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ும் மாணவா்களுக்கு உனது பாா்வையில் காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்கிற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெறும்.
மாணவா்கள் ஓவியங்கள் வரைவதற்கு வரைபடத்தாள் வழங்கப்படும். எழுதுபொருள்கள் மற்றும் வரைவதற்குத் தேவையான அட்டையும் மாணவா்களே கொண்டு வர வேண்டும். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்படும். தொடா்ந்து சிறியவா் முதல் பெரியவா் வரை அனைவரும் கலந்து கொள்ளும் கவியரங்கம் நிகழ்வு நடைபெறும். மேலும் இயற்கையை போற்றுவோம் என்ற தலைப்பில் கவிதைப்போட்டி நடைபெறும்.
இதில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் 16 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி வந்து வாசிக்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் வரும் 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது பெயா்களை கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும். பெயா்களை முன்பதிவு செய்ய 75488 10067 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.