உலக வன நாள் : மரக்கன்றுகள் நடவு

பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலகத்தில் உலக வன நாளை முன்னிட்டு பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச்.21 ஆம் நாள் உலக வன நாளாக கொண்டாடப்படுகிறது. வனங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் பலன்கள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஐக்கிய நாடுகளில் சபையின் பரிந்துரையின் படி, மார்ச்.21 இல் சர்வதேச வன நாள் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின்படி பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலகத்தில் மார்ச் 21 வியாழக்கிழமை அன்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். வனவர் சிவசங்கரன், காவல்துறை உதவி ஆய்வாளர் தங்கப்பன், தலைமை காவலர் மாரிமுத்து மற்றும் வனச்சரக பணியாளர்கள் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலக வளாகத்தில், இலுப்பை, புங்கன், வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், வனங்களை பாதுகாப்போம், வனவிலங்குகளை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Tags

Next Story