அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சுகாதார தின விழா

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சுகாதார தின விழா
சுகாதார விழா
விழுப்புரம் மாவட்டம், கண்டமானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சுகாதார தின விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் அடுத்த கண்டமானடியில் உள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சுகாதார தின விழா கொண்டாடப்பட் டது. விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரியாபத் மாஷினி தலைமை தாங்கினார். பொது சுகாதார நிபுணர் டாக்டர் நிஷாந்த் முன்னிலை வகித்தார். பாதுகாப்பான குடிநீர், சுத்தமான காற்று, நல்ல ஊட்டச்சத்து, தரமான வீடுகள், ஒழுக்கமான வேலை மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத் துரைக்கப்பட்டது.

மேலும் டாக்டர் பானுஸ்ரீயின் மேற்பார்வையில் ஆரோக்கியமான விருப்பங்களை காண்பிக்கும் உணவுக்கடை அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, சுகாதார கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை செவிலியர்கள் தேவ சேனா, லட்சுமிப்பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story