ஊத்தங்கரையில் உலக செவித்திறன் தினம் அனுசரிப்பு
உலக செவித்திறன் கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உலக செவித்திறன் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை பொறுப்பு மருத்துவ அலுவலர் ப.மதன்குமார் தலைமை தாங்கினார்.
ஆண்கள் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கு.கணேசன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் செவிலியர்கள் சாந்தி, கலைச்செல்வி, சாமுண்டீஸ்வரி, தனலட்சுமி, கனிமொழி, வளர்மதி, கண் பரிசோதனையாளர் கோபாலகிருஷ்ணன், கார்த்திகேயன், நம்பிக்கை மையத்தை சார்ந்த காயத்ரி, பாஷா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3-ம் தேதி உலக செய்தித் திறன் தினத்தில் காது கேளாதோர்களுக்கு முக்கியத்துவம் தரும் பொருட்டு உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட செவித்திறன் குறைபாடு உடைய மற்றும் கேட்கும் திறன் முழுமையாக இல்லாத நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசுகள்,
நிதி உதவி மற்றும் இனிப்பு ஆகியவற்றை ஜேஆர்சி ஆசிரியர் கணேசன் வழங்கினார். முன்னதாக செவித்திறன் குறைபாடு பற்றி பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய மருத்துவ விளக்கம் அளிக்கப்பட்டது.