உலக ஹீமோபீலியா தினம் கடைபிடிப்பு

உலக ஹீமோபீலியா தினம் கடைபிடிப்பு

உலக ஹீமோபிலியா தினம் கடைபிடிப்பு

சேலத்தில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் உலக ஹீமோபீலியா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

உலக ஹீமோபீலியா தினமானது ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 17-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இளம் இந்தியர் அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அமைப்பு ஆகியவை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்து பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட சுகாதார மையத்தின் தொற்றா நோய் பிரிவின் மாவட்ட திட்ட அதிகாரி டாக்டர் ஹரிபிரசாத் கலந்து கொண்டு நோய்க்கான காரணிகள், தடுக்கும் வழிமுறைகள் குறித்து பேசினார். இதில் துறையை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இணையவழியில் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.

வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை துறையின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தனசேகர், ஜெயபாலன், இளம் இந்தியர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் தீபிகா, விக்னேஷ்வரா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story