ராமநாதபுரத்தில் உலக மரபு வார விழா

ராமநாதபுரத்தில் உலக மரபு வார விழா

புகைப்பட கண்காட்சி 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் உலக மரபு வாரவிழாவை முன்னிட்டு “ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் தடங்கள்” என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்விற்கு முதுகலை ஆசிரியர் பூ.முகேந்திரன் தலைமை வகித்தார். மன்றச் செயலாளர் வே.ராஜகுரு முன்னிலை வகித்தார். 9-ம் வகுப்பு மாணவன் அ.முகம்மது சகாப்தீன் அனைவரையும் வரவேற்றார். பள்ளித் தலைமையாசிரியர் ரெ.புரூணா ரெத்னகுமாரி புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார். 9-ம் வகுப்பு மாணவன் சு.ஶ்ரீவிபின் நன்றி கூறினார். கண்காட்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பழைய, நுண், புதிய கற்கால கருவிகள், பெருங்கற்காலத் தடங்கள், பழமையான கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், புத்தர், தீர்த்தங்கரர் சிற்பங்கள், கோட்டைகள், ஓவியங்கள், பாரம்பரிய மரங்கள் போன்றவற்றின் படங்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றைப் பற்றி மாணவ மாணவிகள் ஜனனிஸ்ரீ, பூமிகா, பர்வின், தர்ஷினி, நஜிம் ஷெரிப், காமேஸ்வரன், ஸ்ரீதன்வி ஆகியோர் விளக்கமளித்தனர்.

Tags

Next Story