உலக நாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகம்
புதுக்கோட்டை மாவட்டம் ன, பொன்னமராவதி அருகே குழிபிறையில் அமைந்துள்ள உலகநாயகிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மங்கல இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து அனுஞ்கை, விக்னேஷ்வர பூஜை,வாஸ்து சாந்தி, லெட்சுமி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து முதலாம், இரண்டாம், மூன்றாம்,நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.பல்வேறு புனிதத்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்களில் அடைக்கப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது.
யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை மங்கல இசையுடன் சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.கருடபகவான் கலசத்தை சுற்றிவர பூஜிக்கப்பட்ட புனித நீர் கும்பத்தில் ஊற்றப்பட்டது.
தொடர்ந்து பரிவார தெய்வங்களான சத்தியதேவி, நீதியின்நாயகி,வடக்கு வாசல் செல்வி உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை குழிபிறை ஊரார்கள் செய்திருந்தனர் செய்திருந்தனர்.இந்நிகழ்ச்சியை காண குழிபிறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு அருட்பிராசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.பொன்னமராவதி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.