உலக சிறுநீரக தினம் விழிப்புணர்வு பேரணி
விழிப்புணர்வு பேரணி
உலக சிறுநீரக தின விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
உலக சிறுநீரக தினத்தையொட்டி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை சிறுநீரகவியல் துறை சார்பில், உலக சிறுநீரக தின விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி, கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற அருள்மிகு மீனாட்சி நர்சிங் கல்லுாரி, ரேவதி நர்சிங் கல்லுாரி மாணவ - மாணவியர், மருத்துவமனை துணை நல மருத்துவர் பாஸ்கர், சிறுநீரக சிகிச்சை மருத்துவர் அபிநந்தராஜ், செவிலியர் உள்ளிட்டோர், சிறுநீரக விழிப்புணர்வு குறித்த பதாகையை ஏந்தியபடி சென்றனர்.
Next Story