ஊத்தங்கரை அருகே உலக தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு முகாம்

ஊத்தங்கரை அருகே உலக தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பரிசோதனை முகாம் நடைபெற்றது

ஊத்தங்கரை அருகே உலக தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பரிசோதனை முகாம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் பாம்பாறு அணை இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் முழு உடல் பரிசோதனை முகாம் மற்றும் உலக தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மகனூர்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நடைபெற்ற முகாமில் சிங்காரப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.அன்பரசி, டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொழுநோய் குறித்து மருத்துவ பரிசோதனை மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் உள்ள மக்களுக்கு முழு உடற்ப பரிசோதனை நடைபெற்றது. கிராம செவிலியர்கள் நடமாடும் மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story