கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் உலக தாய் மொழி தினம்

கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் உலக தாய் மொழி தினம்

கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் உலக தாய் மொழி தினம் கொண்டாடப்பட்டது.


கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் உலக தாய் மொழி தினம் கொண்டாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் உலக தாய் மொழி தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்த்துறை தலைவர் மோட்ச ஆனந்தன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் முனியன் முன்னிலை வகித்தார். ஆனந்தி வரவேற்றார்.

நீதித்துறை நடுவர் கண்மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நமது தாய் மொழியை உணர்வுடன் புரிந்து கொண்டு பேச வேண்டும். தாய் மொழி இலக்கியம் கலை பண்பாடு நாகரிகம் போன்றவற்றை முழுமையாக பயன்படுத்தும் போது நாமும் வளர்வோம், தமிழும் வளரும் என கருத்துரை வழங்கினார்.

கல்லுாரி துறைத் தலைவர்கள் தருமராஜா, முருகானந்தம், வீரலட்சுமி, விஜயகுமார், சபிதா, நுாலகர் அசோக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் நாகராஜன், ஆனந்தகுமார், கற்பனை செல்வன், இன்பக்கனி, ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர். மாணவர் சத்தியமூர்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வீரப்பன் நன்றி கூறினார்.

Tags

Next Story