உலகப் புகையிலை எதிர்ப்பு தினம்: பிரம்மகுமாரிகள் விழிப்புணர்வு முகாம்
இன்று நாடு முழுவதும் உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அரசு மற்றும் தனியார் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் தன்னார்வ தொண்ட அமைப்புகள் பொதுமக்களிடையே பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மதுரை ரயில் நிலையத்தில்.சிம்மக்கல் பிரம்ம குமாரிகள் தலைவர் செந்தாமரை தலைமையில் உலக புயலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து இரயில் பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மதுரை ரயில்வே கூடுதல் மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கரன்,மாவட்ட கல்வி அலுவலர் சாய் சுப்புலட்சுமி ரயில்வே மாவட்ட மருத்துவ அலுவலர் ஜெயஸ்ரீ,டிவிஎஸ் லட்சுமி ஹாஸ்பிடல் மருத்துவர் சாந்தி,மதுரை மூத்த ராஜயோக ஆசிரியர் செந்தாமரை சுற்றுச்சூழல் துறை ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த கண்ணன் மற்றும் பிரம்ம குமாரிகள் இயக்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.