உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்..

செவிலியர் தினம்
தன்னலமற்ற சேவையை வழங்கி வரும் செவிலியர்களை பெருமைப்படுத்தும் விதமாக 'விளக்கேந்திய மங்கை' , 'கை விளக்கேந்திய காரிகை' என்று உலகம் முழுவதும் போற்றப்படுபவரும் , நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளான மே 12 ஆம் தேதி உலகம் முழுவதும் செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நோயாளிகளுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னத சேவையை கவுரவிக்கும் விதத்தில் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அரசு மருத்துவமனையில் ராசிபுரம் ரோட்டரி கிளப் எஜுகேஷன் சிட்டி சார்பில் செவிலியர்கள் தின கொண்டாட்டம் இராசிபுரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது .
இராசிபுரம் ராயல் ரோட்டரி கிளப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் இதில் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் கே. கலைச்செல்வி, தலைமை தாங்கினார். உடன் கிளப் தலைவர் தீபக்* அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணை ஆளுநரும், தலைமை மருந்தாளுனருமான Aராஜு , செவிலியர் மாதேஸ்வரன், கிளப் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செவிலியர் வசந்தகுமாரி,சாந்தி பரஞ்ஜோதி, மேகலா, கிளப் மாவட்ட துணை ஆளுநர்(தேர்வு) பாரதி, ரேணுகா. ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார், அனைத்து செவிலியர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் வாழ்த்துரை மருத்துவர் செந்தில்குமார் விஜயகுமார் ,மயக்க நிபுணர் செந்தில்குமார், சியாமளா ரம்யா மற்றும் பல மருத்துவர்கள் வாழ்த்தி பேசினார்கள். செவிலியர்கள் சிறப்பான சேவையை பற்றி விரிவாக பேசினார்.
