அத்தி செவிலியர் கல்லூரியில் உலக செவிலியர் தினம் கொண்டாட்டம் !

அத்தி செவிலியர் கல்லூரியில் உலக செவிலியர் தினம் கொண்டாட்டம் !

குடியாத்தம் அத்தி செவிலியர் கல்லூரியில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.


குடியாத்தம் அத்தி செவிலியர் கல்லூரியில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

குடியாத்தம், காக்கா தோப்பு அத்தி செவிலியர் கல்லூரியில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. அத்தி கல்விக் குழுமத்தின் தலைவர் டாக்டர் பி.சவுந்தரராஜன் தலைமை தாங்கி, செவிலியர்களின் அவசிய சேவை குறித்து விளக்கிக் கூறினார். இதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செவிலியர்களின் பணிகள் பற்றி சிறப்புரை ஆற்றினார்.

குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே.குமரவேல், அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வர் தங்கராஜ், நிர்வாக அலுவலர் செந்தில், மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் காமாட்சி, ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்தி செவிலியர் கல்லூரி மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் மூலம் பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story