அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி !
விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் பொது சுகாதார துறை, இளம் இந்தியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி வீரபாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பூலாவரி ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அதிகாரி ராஜேஷ் கலந்து கொண்டு உலக மக்கள் தொகை தினம் கடைபிடிப்பது குறித்து எடுத்துரைத்தார். மேலும் துறை மாணவ, மாணவிகள் மவுன மொழி நாடகம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர், பொது சுகாதார பிரிவு உதவி பேராசிரியர்கள் பிரியங்கா, திவ்யா ஆகியோர் செய்திருந்தனர்.