கண்களை காட்டியபடி உலக சாதனை படைத்த மாணவர்கள்
ராசிபுரம் அருகே இந்திய அளவிலான புலன் உணர்வு திறன் போட்டி விரிக்ஷா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் போட்டியில், 240 மாணவ, மாணவியர் பங்கேற்பு.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஏ.கே.சமுத்திரத்தில் உள்ள ஞானமணி கல்வியில் குழுமத்தில் ஞானோதயா இன்டர்நேஷனல் மேல்நிலைப்பள்ளியில், விரிக்ஷா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் நடத்தும், முதல் முறையாக இந்திய அளவிலான புலன் உணர்வு திறன் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை ஞானமணி கல்வி குழுமத்தின் தலைவர் அரங்கண்ணன், தாளாளர் மாலா லீனா மற்றும் சிறப்பு விருந்தினரும், தனியார் தொலைக்காட்சி சினிமா நடிகரும் சமூக ஊடகவியலாளருமான ராஜ் மோகன், பள்ளி முதல்வர் ரோஸிலின் பபிதா, பள்ளியின் நிர்வாக அதிகாரி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தனர்.
இவ்வுலக சாதனை போட்டியில் ஞானோதயா இன்டர்நேஷனல் பள்ளியைச் சேர்ந்த, 240 மாணவ, மாணவிகள் கலந்து தன் கண்களை கட்டிக்கொண்டு வண்ணம் அறிதல், வில்வித்தை, பரதநாட்டியம், சிலம்பம், யோகா, சதுரங்கம், சைக்கிள் ஓட்டுதல், வண்ணம் தீட்டுதல் போன்ற திறன்களை செய்து காட்டி உலக சாதனை படைத்தனர். பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருக்ஷா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கி பெருமைப்படுத்தியது. மேலும் இதில் பேசிய சிறப்பு விருந்தினர் ராஜ்மோகன் ஆசிரியர்களின் பெருமையும், பெற்றோர்கள் பெருமையும் மாணவ மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார். தொடர்ந்து இது போன்ற கல்வி நிறுவனத்தில் நீங்கள் சிறப்பாக படித்து வாழ்வில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் அதே வேளையில் ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமையை மேம்படுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும் என அனைவருக்கும் அறிவுரை வழங்கினார்.