சிலம்பத்தில் உலக சாதனை நிகழ்ச்சி

சிலம்பத்தில் உலக சாதனை நிகழ்ச்சி

 சேலம் கன்னங்குறிச்சியில் சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. 

சேலம் கன்னங்குறிச்சியில் சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது.

சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் வீரச்சிலம்பொலி கலைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகளுக்கு கடந்த பல ஆண்டுகளாக இலவசமாக சிலம்பம் கற்று தரப்படுகிறது. இங்கு சிலம்பம் கற்று வரும் மாணவ, மாணவிகள் 250 பேர் ஒரே நேரத்தில் 120 நிமிடங்களில் 120 முறை சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை நடத்தும் நிகழ்ச்சி கன்னங்குறிச்சியில் உள்ள பாலமுருகன் சிற்ப கலைக்கூடம் மைதானத்தில் நடைபெற்றது.

இதற்கு தலைமை சிலம்பம் பயிற்சியாளர் ப.முருகேசன் தலைமை தாங்கி சாதனை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சிலம்பம் மாநில நடுவர் எஸ்.முருகேசன் வரவேற்று பேசினார். போலீஸ் உதவி கமிஷனர் பாபு, கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து 250 மாணவ, மாணவிகள் 120 நிமிடங்களில், 120 முறை சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர். முடிவில் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags

Next Story