உலக சாதனை படைத்த சிலம்ப மாணவர்கள்

திருச்சுழியில் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு 75 - நிமிடம் மண்டியிட்டபடி சிலம்பத்தில் தலைச்சுற்று சுற்றி உலக சாதனை படைத்தல் நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நமது தேசத்திற்கு பாடுபட்ட தேச தலைவர்களை போற்றும் வகையில் கலாம் உலக சாதனை நிறுவனம் மற்றும் பாலா தற்காப்பு பயிற்சி பள்ளி நல சங்கம் சார்பில் 75 நிமிடம் மண்டியிட்டு சிலம்பத்தில் தலைசுற்று சுற்றி உலக சாதனை படைத்தல் நிகழ்ச்சியில் திருச்சுழி, பனையூர், ராமநாதபுரம், பரளச்சி, மதுரை பகுதியைச் சேர்ந்த சுமார் 300 - க்கும் மேற்பட்ட 3-வயது முதல் 20 - வயதுள்ள சிலம்ப மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மாணவர்கள் இந்திய வரைபடம் வடிவில் வரையப்பட்ட இடத்தில் மண்டியிட்டு சிலம்பம் சுற்றி பார்ப்பவர்கை கண் கவர செய்தனர். மேலும் நம் தேசத்திற்கு பாடுபட்ட தேசிய தலைவர்களை போற்றும் வகையில் ஹர்ஷிதா என்ற மாணவி நான்கு மணி நேரம் கண்களை கட்டிக்கொண்டு இடைவிடாமல் ஒற்றைக்கம்பு சுற்றியும், பெரியநரேன் கார்த்தி என்ற மாணவர் கண்களை கட்டிக்கொண்டு 75 நிமிடம் பானை மீது நின்று இரட்டைக் கம்பு சுற்றியும், தங்கம் என்ற மாணவர் மற்றும் ஹன்சிகா, கமலி, சசிகலா என்ற மாணவியும் அருப்புக்கோட்டையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் கட்டைக்காலில் நடந்து ஸ்டார் சிலம்பம் சுற்றியும், சுருள்வாள் சுற்றியும், ஒற்றைக் கம்பு மற்றும் இரட்டைக் கம்பு சுற்றியும் உலக சாதனை படைத்தனர். 75 நிமிடம் சாதனை படைத்த பிறகு சிலம்ப மாணவர்கள் அங்கு போட்ட பாடலுக்கு நடனமாடி சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். பின்னர் கலாம் உலக சாதனை நிறுவனம் சார்பில் 75 நிமிடம் மண்டியிட்டு சிலம்பத்தில் தலைசுற்று சுற்றி சாதனை படைத்த வீரர்களுக்கு சான்றிதழ், மெடல் மற்றும் கேடயங்களை வழங்கினார்கள்.

Tags

Next Story