உலக ரெட்கிராஸ் தினம். ஜீன் ஹென்றி டூனான்ட் இன்று பிறந்த நாள் விழா

திருவிடைமருதூரில் உலக ரெட்கிராஸ் தினம் மற்றும் ஜீன் ஹென்றி டூனான்ட் இன்று பிறந்த நாள் விழா நடந்த்து.

உலக ரெட்கிராஸ் தினம். ஜீன் ஹென்றி டூனான்ட் இன்று பிறந்த நாளை முன்னிட்டு, இன்று 8.5.2024 திருவிடைமருதூரில் அவருடைய திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, ரெட்கிராஸ் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்புகளின் சார்பில், பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ரெட்கிராஸ் தலைவர் வ. மா. பாஸ்கரன், செயலர் ஜா.பாஸ்கர், பொருளர் பி. ஃபைஸ்அகமது, ஆயுள் உறுப்பினர்கள் க. பாரதிமோகன், பா. மங்கையர்க்கரசி, மாவட்ட ஜே.ஆர்.சி. இணை அமைப்பாளர் ச. கார்த்திகேயன், ஜே.ஆர்சி ஆலோசகர்கள் சா.மோகன், ச.அன்புமணி, சீ. சொக்கலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.*

Tags

Read MoreRead Less
Next Story