கே.எஸ்.ஆர் மகளிர் கல்லூரியில் உலக சிறுதானிய ஆண்டு விழா
உலக சிறுதானிய ஆண்டு விழா
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் உலக சிறுதானியங்கள் வருட விழா நடைப்பெற்றது. கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரிஅகிலா முத்துராமலிங்கத்தின் வாழ்த்துரையோடு தொடங்கப்பட்டது. இளநிலை இரண்டாமாண்டு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை துறையைச் சார்ந்த தர்ஷ்னி வரவேற்புரை வழங்கினார். மேலும் ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை துறைத்தலைவி பூவிழிச்செல்வி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறுதானிய உணவுவகைகளை பயன்ப்படுத்துவதனால் மனிதன் நோயின்றி நீண்டகாலம் வாழ்வதற்கான அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்த பயனுள்ள உணவு என்பதை எடுத்துரைத்தார். இவ்விழா லெப்டினன் கர்னல் சூரஜ் எஸ் நாயர், கட்டளை அதிகாரி, 11 TN SIG COY (NCC) வழிகாட்டுதலின் படி நடைப்பெற்றது. மேலும் மாணவிகளின் தனித்திறமையை கண்டறியும் விதமாக சிறுதானிய உணவு வகைகளை சிறப்பான முறையில் தயார் செய்து வெற்றி பெற்ற தேசிய கேடட் கார்ப்ஸ் மாணவிகளுக்கு கல்லூரியின் முதல்வர் பரிசுகளை வழங்கினார். இறுதியாக இரண்டாமாண்டு பொருளாதார துறையைச் சார்ந்த சுவாதி நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.