உலக கால்நடை மருத்துவர்கள் தினம்: வெறிநோய் தடுப்பூசி முகாம்
தடுப்பூசி முகாம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உலக கால்நடை மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அரசு கால்நடை மருத்துவமனை சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது. விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் நலனை உறுதி செய்வதில் கால்நடை மருத்துவர்களின் பங்கு முக்கியமானதாகும்.
கால்நடை மருத்துவர்களை கெளரவிக்கும் வகையில் நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமை உலக கால்நடை மருத்துவர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கோவில்பட்டி அரசு கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது. வளாகத்தை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் எட்வின் தலைமை வகித்தார். வனத்துறை அலுவலர்கள் பிரசன்னா, பாலகுமார்ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சஞ்சீவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்தார்.
இதில் கால்நடை மருத்துவர்கள் கண்ணபிரான்,ராகுல் கிருஷ்ணாகாந்த், நந்தகுமார், சதீஷ்குமார், அபிநாஷ் உள்பட பயிற்சி மருத்துவ மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறும் நோய் தடுப்பூசி போடப்பட்டது.