உலக தண்ணீர் தினம்; வைகை ஆற்றை தூய்மை செய்த மாணவர்கள்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றை சமூக ஆர்வலர்கள், மாணவர் தூய்மை செய்தனர்.
மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் மதுரை வைகை ஆற்றின் மைய மண்டபத்தில் வைத்து தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் வைகை நதி குறித்து சொற்பொழிவும் மற்றும் வைகை தூய்மை படுத்தும் பணி நடைப்பெற்றது. 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு வைகை ஆற்றில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை அகற்றினர். அதோடு உலக தண்ணீர் தினத்தில் வைகை நதியை மாசு படுத்த மாட்டோம். மாசு படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்த நிகழ்வில் வைகை நதி மக்கள் இயக்கம் தலைவர் ராஜன், மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க செயலாளர் கதிரவன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தலைவர் பேராசிரியர் எம் ,ராஜேஷ், மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.