பெரம்பலூர் மாவட்டத்தில் உலக நல வேள்வி சிறப்பு விழா

X
வேள்வி சிறப்பு விழாவில் பங்கேற்றவர்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் உலக நல வேள்வி சிறப்பு விழா, 23 இடங்களில் நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஜனவரி 1ந்தேதி உலக சமுதாய சேவா சங்கத்தின் சார்பில், உலக நல வேள்வி சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், உலக நல வேள்வி சிறப்பு விழா பெரம்பலூர் அறிவுத்திருக்கோயிலில் ஜனவரி 1ஆம் தேதி மாலை நடைபெற்றது.
இதில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் பொறுப்பாளர்கள், பேராசிரியர்கள், பொது மக்கள் கலந்துக்கொண்டு உலக மக்களின் ஆரோக்கியம், அமைதியோடு வாழ வேள்வி நடத்தப்பட்டது. அப்போது வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என்று 108 முறை தியான நிலையில் வாழ்த்தப்பட்டது. ஜப்பான் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்தில் மக்கள் பாதுகாப்புக்காக வாழ்த்துக்கூறப்பட்டது.
இதேபோல், பெரம்பலூர் நடேசன் நகர், மேலப்புலியூர் உள்ளிட்ட 23 இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
