உலக காற்று தினம்

உலக காற்று தினம்

167 ஆவது வார நிகழ்வாக உலக காற்று தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா நடைபெற்றது.


167 ஆவது வார நிகழ்வாக உலக காற்று தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா நடைபெற்றது.

உலக காற்று தினம் யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 167 ஆவது வார நிகழ்வாக உலக காற்று தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா மதுரை செனாய் நகர் சேவாலயம் பள்ளியில் நடைபெற்றது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் சிலம்பம் மாஸ்டர் பாண்டி தலைமை வகித்தார். உறுப்பினர் கார்த்திகேயன் வரவேற்றார். ஆலோசகர் ராகேஷ் முன்னிலை வகித்தார். உறுப்பினர் பரமேஸ்வரன் தொகுத்து வழங்கினார் .

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரிசன சேவக சங்க செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, தற்போது காந்தியின் தேவை, சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து உரை நிகழ்த்தினார். யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக சீனிவாசன் அவர்களுக்கு 'நவீன காந்தியவாதி விருது ' வழங்கப்பட்டது. நிகழ்விற்கு தேவையான வேப்ப மரங்களை ஆலோசகர் பிரபு வழங்கினார்.

வலைகளை தலைமை ஆசிரியர் தென்னவன் வழங்கினார். பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளால் வேப்ப மரம் நடப்பட்டது. விழாவில் சேவாலயம் மேலாளர் கார்த்திகேயன் மற்றும் ஆலோசகர்கள் சமூக ஆர்வலர்கள் ஸ்டெல்லா மேரி, பாஸ்கரன், பாலமுருகன், பசுமை சாம்பியன் அசோக் குமார், அப்துல் கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் செந்தில்குமார், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மரங்கள் நட்டனர். மாணவி பூஜா நன்றி கூறினார்.

Tags

Next Story