உலக யோகா தினம் மற்றும் மாணவர்களுக்கான தேர்தல் விழா

திண்டுக்கல் செவாலியர் அகாடமி பள்ளியில் உலக யோகா தினம் மற்றும் மாணவர்களுக்கான தேர்தல் நடந்தது.

திண்டுக்கல் செவாலியர் அகாடமி பள்ளியில் உலக யோகா தினம் மற்றும் மாணவர்களுக்கான தேர்தல் நடந்தது. இதற்கு பள்ளி தாளாளர் அருட்தந்தை ஆரோக்கிய பிரபு தலைமை வகித்தார். சகோதரர் ஜான் லூகாஸ், பள்ளி முதல்வர் ரோஸ்லின், துணை முதல்வர் ஞானசீலா, உடற்கல்வி ஆசிரியர் மணிகண்டன் ஆகியோர் யோகா குறித்து விளக்கினர்.

பின்பு நடந்த மாணவர்கள் தேர்தல் குறித்து முதல்வர் ரோஸ்லின் பேசியதாவது: மாணவர்கள் ஜனநாயக திருவிழாவை இப்போது காண இருக்கிறீர்கள். உங்களுக்காக மாதிரி ஓட்டுச் சாவடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஓட்டு போட்டு ஹெட்பாய், ஹெட்கேர்ள், அசிஸ்டன்ட் ஹெட்பாய், அசிஸ்டன்ட் ஹெட்கேர்ள், டிசிப்ளின் செகரட்டரி, அவருக்கு ஒரு அசிஸ்டன்ட், கல்ச்சுரல் செகரட்டரி , அவருக்கு ஒரு அசிஸ்டன்ட் , ஸ்போர்ட்ஸ் செகரட்டரி அவர் ஒரு அசிஸ்டன்ட்டாக மொத்தம் பத்து பேருக்கு நீங்க ஓட்டு போடணும். ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில நீங்கள் தேர்வு செய்யப்படுவீர்கள். தேர்வானவர்கள் மாணவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும். ஆனால் பாதகமாக இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story