நாமக்கல் நவோதயா அகாடமி பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாட்டம்

நாமக்கல் நவோதயா அகாடமி பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாட்டம்

யோகா தினம்

நாமக்கல் கீரம்பூரில் உள்ள தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் 21.06.2024 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி பொருளாளர் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் முன்னிலையில் யோக கலைகளை நிகழ்த்தி காட்டினார்கள். பள்ளி முதல்வர் அவர்கள் பேசும் போது இவ்வாண்டின் யோகா தினத்தின் தலைப்பான Self and society – தான் மற்றும் சமூகம் என்பதன் அவசியத்தைப்பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்ததோடு “யோக கலை என்பது மாணவர்கள் அன்போடும்ரூபவ் அறிவோடும், ஒழுக்கமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு ஏற்ற மிகச்சிறந்த கலை அதனை காலை மற்றும் மாலை தினமும் பின்பற்ற வேண்டும்” என்று கூறினார்.

மேலும் யோகாவின் முக்கியத்துவம் அறிந்தே நமது பள்ளியில் யோகாவிற்கான பாடவேளை கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும் மாணவர்கள் அதைச் சரியாகப் பயன்படுத்தி யோகா செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

“ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்கும் கலையே யோகா” என்பதை நிரூபிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளியின் யோகா ஆசிரியை அனைவருக்கும் நன்றி உரை கூறி தேசியக் கீதத்துடன் இந்நிகழ்ச்சி நிறைவுப் பெற்றது.

Tags

Next Story