அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் உலக ஜூனோசிஸ் தினம் கடைபிடிப்பு !

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் உலக ஜூனோசிஸ் தினம் கடைபிடிப்பு !

 விழிப்புணர்வு நிகழ்ச்சி

விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை மாதம் உலக ஜூனோசிஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை மாதம் உலக ஜூனோசிஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனையில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை வளாகத்தில் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக சேலம் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கால்நடை பொது சுகாதாரம் மற்றும் தொற்று நோயியல் பிரிவின் உதவி பேராசிரியர் அண்ணாதுரை பங்கேற்று விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் குறித்தும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கி பேசினார். இதற்கான ஏற்பாடுகளை துறையின் நாட்டு நலப்பணித்தி்ட்ட ஒருங்கினைப்பாளர் தனசேகர், ஜெயபாலன், அல்போன்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story