சிவகாசி அருகே சாம்பாரில் புழு இருந்த விவகாரம்:அதிகாரிகள் ஆய்வு

சிவகாசி அருகே சாம்பாரில் புழு இருந்த விவகாரம்:அதிகாரிகள் ஆய்வு
சிவகாசி அருகே சாம்பாரில் புழு இருந்த விவகாரம்,உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு...
சிவகாசி அருகே சாம்பாரில் புழு இருந்த விவகாரம் தொடர்பாக உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அருகேயுள்ள திருத்தங்கல்லி்ல் விருதுநகர் சாலையில் உள்ளது.திருத்தங்கல் இயங்கும் ஓட்டலுக்கு சிவகாசியில் ஓட்டலில் இருந்து சமைத்த உணவு பொருட்கள் கொண்டு செல்வது வழக்கம் என கூறப்படுகின்றது.இந்நிலையில் திருத்தங்கல்லில் இயங்கி வரும் ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது சாம்பாரில் புழு மிதந்துள்ளது. உடனே ஓட்டல் பணியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.அதற்கு அவர்கள் முறையாக பதில் சொல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதனை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜாமுத்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து சிவகாசியில் இயங்கி வரும் ஓட்டலிலும் ஆய்வு செய்தார். அப்போது அங்கு சுகாதாரமான முறையில் சமையல் கூடம் இல்லை என்றும்,உணவு பொருட்கள் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் சுத்தமாக,

இல்லை என்றும், தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் திறந்த நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.அதனை தொடர்ந்து ஓட்டல் நிர்வாகத்திடம் உரிய விளக்கம் கேட்டு உணவுதுறை அதிகாரி நோட்டீஸ் கொடுத்தார்.இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story