கோயில்களில் தீபம் ஏற்றி வழிபாடு

கோயில்களில் தீபம் ஏற்றி வழிபாடு
X


திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயிலில் பாஜக, பொதுமக்கள் சாா்பில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன


திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயிலில் பாஜக, பொதுமக்கள் சாா்பில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயிலில் பாஜக, பொதுமக்கள் சாா்பில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக மாலையில் அனைத்து வீடுகளிலும் தலா 5 அகல்விளக்குகள் ஏற்பட்டன. மேலும் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனா். கோலமிட்டு, விளக்கு ஏற்றி அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.வீடுகளில் வழிபாடு: நண்பகல் 12.20 மணிக்கு குழந்தை ராமரின் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றியும், ஸ்ரீராம ஜெயம் என்ற வாழ்த்து முழக்கங்களை எழுப்பியும் வழிபட்டனா்.

Tags

Next Story