ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் 63 நாயன்மார்களுக்கு பூச வழிபாடு

X
நாயன்மார்களுக்கு பூச வழிபாடு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள 63 நாயன்மார்களுக்கு 18-ம் ஆண்டு பூசம் வழிபாடு நடைபெற்றது. ராசிபுரம் பகுதியில் கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஒரி மன்னரால் கட்டப்பட்ட ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் 63 நாயன்மார்களுக்கு உருவச்சிலை உள்ளது. ஆண்டு தோறும் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் நாயன்மார்கள் விழா நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து நமச்சிவாய வாழ்க சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் 18-ம் ஆண்டாக கார்த்திகை மாத பூசம் வழிபாடு நடத்தப்பட்டது. இதனையொட்டி நடந்த விழாவில், நாயன்மார்களுக்கு பால், தயிர், தேன், கரும்பு சாறு, திருமஞ்சனம், சந்தனம், பஞ்சாமிர்தம், திருநீர் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதனை கோவில் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான சிவ தொண்டர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.
Next Story
