நாகராஜா கோவில் தெப்பக்குளத்தில் சாமிக்கு ஆராட்டு
கன்னியாகுமரி மாவட்டம்,நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகராஜா கோயிலில் தை திருவிழா தெப்பகுள நீராட்டு வெகுவிமர்சையாக நடைபெற்றது.
குமரி மாவட்டம், நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் ஆனந்த கிருஷ்ணர், சிவன், துர்க்கை அம்மன், பாலமுருகன், தர்ம சாஸ்தா சன்னதிகள் அமைந்துள்ளன. இதில் அனந்தகிருஷ்ணருக்கு தை மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று பத்தாம் திருவிழா ஒட்டி நேற்று மாலை 5 30 க்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் தெப்பக்குளத்தில் வைத்து ஆறட்டு நடைபெற்றது. மேல் சாந்திகள் தலைமையில் பூஜைகள் நடத்தினர்.
பின்னர் இரவு பழையாற்று ஆறாட்டுத்துறைக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. அங்கு சாமியை கொண்டு செல்லப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் இரவு 9. 30மணி அளவில் ஆறாட்டு துறையிலிருந்து சுவாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. வழிநடக பக்தர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு அளித்தனர்.
Next Story