சாம்பார் சாதத்தில் நெளிந்த புழு - ஹோட்டலுக்கு சீல்

சாம்பார் சாதத்தில் நெளிந்த புழு - ஹோட்டலுக்கு சீல்

சாதத்தில் புழு

சேலத்தில் வாடிக்கையாளருக்கு புழுவுடன் சாம்பார் சாதம் விநியோகித்த ஹோட்டலை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
சேலம் பிருந்தாவனம் ரோட்டில் ஒரு உணவகம் இயங்கி வந்தது. இந்த உணவகத்தில் நேற்று வாடிக்கையாளர் ஒருவர் சாம்பார் சாதம் வாங்கி சாப்பிட்டார். அப்போது அந்த சாதத்தில் புழு நெளிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வாடிக்கையாளர் உணவக உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.மேலும் இச்சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். உடனே அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள்ஆய்வு செய்தனர். அப்போது சுகாதாரமின்றி அந்த உணவகம் இயங்கியதை அறிந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த உணவகத்திற்கு சீல் வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story