நாமக்கல்லில் "எழுத்தாளர் கலைஞர்" "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி

"எழுத்தாளர் கலைஞர்" "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடிடும் நோக்கில், "எழுத்தாளர் கலைஞர்" குழுவின் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு, "எழுத்தாளர் கலைஞர்" குழுவின் சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகள், அவரது பரிமாணங்கள், புகழ் ஆகியவை இன்றைய இளம் தலைமுறையினர்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் தயார் செய்யப்பட்ட "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி பல்வேறு மாவட்டங்களில் பயணிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக நாமக்கல் நகராட்சி, பூங்கா சாலையில் வருகை புரிந்த "எழுத்தாளர் கலைஞர்" "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தியினை, மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் முன்னிலையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இராஜேஸ்குமார் வரவேற்று டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நாமக்கல் நகராட்சி பூங்கா சாலையில் காட்சிப்படுத்தப்பட்ட இவ்வூர்தியானது மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை சார்பாக ”பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பேனாக்களைப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர் மன்றத் தலைவர் து.கலாநிதி, துணைத் தலைவர் செ.பூபதி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) க.பிரபா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், நாமக்கல் நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story