எழுத்தாளர் விழியனின் படைப்புலகம்: பள்ளியில் கதை சொல்லும் நிகழ்வு!

எழுத்தாளர் விழியனின் படைப்புலகம்: பள்ளியில் கதை சொல்லும் நிகழ்வு!

விழியனின் படைப்புலகம் 

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வாசிப்போர் மன்றத்தில், சிறார் எழுத்தாளர் விழியனின் படைப்புலகம் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவரது கதைகளை மாணவர்கள் சொல்லி விளக்கினர்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். விழியன் எழுதிய 'பெரிய்ய' என்ற கதையை மாணவர் ஆண்டனி ஜெனிசா, 'இந்திரன்' கதையை 'டம்ரூ' கதையை தாரிகா, 'மாடரிகா' கதையை தருண், 'பென்சில்களின் அட்டகாசம்' கதையை கசானா இஜ்ஜத், 'வளையல்கள் அடித்த லூட்டி' கதையை தெளபிகா, 'மியாம்போ' கதையை ஆண்டோ ஜெய்சன் ஆகியோரும் சொல்லி விளக்கினர்.

நிகழ்ச்சியில் விதைக்கலாம் அமைப்பின் நிறுவனரும் அரசுப் பள்ளி ஆசிரியருமான கவிஞர் மலையப்பன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக வாசிப்போர் மன்ற நிர்வாகிகளாக தலைவர் த. மதுஸ்ரீ, செயலர் எஸ். தாரிகா, துணைத் தலைவர் ஹரிபிரியா, துணைச் செயலர் ஆண்டனி ஜெனிசா, ஒருங்கிணைப்பாளர்களாக சிவானி, மாரீஸ்வரி, தருண் வர்ஷன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வாசிப்போர் மன்ற விழாவில் பள்ளியின் இயக்குநர் சுதர்சன், துணை முதல்வர் குமாரவேல் ஆகியோரும் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர். முன்னதாக மாணவி மதுஸ்ரீ வரவேற்றார். முடிவில் மாணவி சிவானி நன்றி கூறினார்.

Tags

Next Story