இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு
இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் 2 -ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு.
தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 3359 இரண்டாம் நிலை காவலர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வானது பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள அனைத்து தேர்வர்களுக்கும் பெரம்பலூர் மாவட்டம் துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் 10.12.2023 ஆம் தேதி நடைபெற்றது. இந்த எழுத்து தேர்வானது குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை காவல் துறை தலைவர் அன்பு மேற்பார்வையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தலைமையில் நடைபெற்றது. இத்தேர்விற்கு பெரம்பலூர்,அரியலூர் ஆகிய இரு மாவட்டங்களை சேர்ந்த ஆண் பெண் இருபாலரையும் சேர்த்து 5212 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு நாளான இன்று 3245 ஆண்கள் 1049 பெண்கள் என மொத்தம் 4294 பேர் தேர்வில் கலந்துகொண்டனர் இதில் 693 ஆண்கள் 225 பெண்கள் என மொத்தம் 918 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. மேலும் இத்தேர்விற்கு அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை 600 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story