கூட்டுறவு சங்க காலிப்பணியிடங்களுக்கு டிச.24ல் எழுத்து தேர்வு
எழுத்து தேர்வு
திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு அச்சகங்கள்,மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் இதர சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப ஏதுவாக மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் அறிவிப்பு வழங்கப்பட்டு 10.11.2023 முதல் 01.12.2023 வரை இணைய தளம் வழி தகுதி பெற்ற விண்ண ப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டதில், தகுதியான விண்ணப்ப தாரர்களுக்கு எழுத்துத் தேர்வு வரும் 24ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 வரை திருவண்ணாமலை மணலூர்பேட்டைசாலையில் இயங்கிவரும் சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் இணைய தளத்தில் இருந்தும் தங்களது எழுத்துத் தேர்வுக்கானநுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மேலும் எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு தபால் வழி அனுப்பி வைக்கப்படாது என்றும், இணைய தளம் வழி மட்டுமே அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின் படி விண்ணப்பதாரர்கள் உரிய நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே எழுத்துத் தேர்வில் கலந்துக் கொள்ள வேண்டும். எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்ய ஏற்படும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் இ-மெயில் மூலமாகவும் அல்லது திருவண்ணாமலை மாவட்ட ஆள்சேர்ப்புநிலைய முகவரியில் அலுவலக வேலை நேரங்களில் நேரிலும் உதவி மையம் தொடர்பு தொலைப்பேசி எண்: 04175-298341, 7338749504 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறுதெரிவித்துள்ளார்.