வேகத்தடை அமைக்க யாதவ மக்கள் இயக்கம் கோரிக்கை

திருவண்ணாமலை சென்னை பைபாஸ் சாலையில் உள்ள காந்திநகர் மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே வேகத்தில் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைக்கின்றனர். காந்திநகர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
காலை ,மாலை இருவேளையும் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்வது பள்ளி விட்டு வெளியே வருவது என இருக்கின்றனர் .அப்போது சாலையில் மிக வேகமாக வர பேருந்துகள் மாணவர்களை அச்சுறுத்துகிறது .சில நேரங்களில் விபத்தும் ஏற்பட்டு இருக்கிறது ஆகவே காந்திநகர் மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே இரு பக்கமும் வேகத்தில் அமைத்து அப்பகுதி மக்களுக்கும் காந்திநகர் மெட்ரிகுலேஷன் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கும் பாதுகாப்புடன் பள்ளி செல்ல ஏற்பாடு செய்து தருமாறு பொதுப்பணித்துறை அமைச்சருக்கு யாதவ மக்கள் இயக்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
