சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா முன்னிட்டு யாகசாலை பூஜை

சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா முன்னிட்டு யாகசாலை பூஜை

யாகசாலை

குப்பாகவுண்டர் தெருவில் அமைந்துள்ள அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா முன்னிட்டு யாகசாலை பூஜை நடைபெற்றது.

தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட குப்பா கவுண்டர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் அருள்மிகு மாரியம்மன் அருள்மிகு ஸ்ரீ பூவாடை காவேரி அம்மாள் மற்றும் அருள்மிகு ஸ்ரீ முனியப்பன் சாமி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 8 தேதி கணபதி ஹோமம் ஸ்ரீ மகாலட்சுமி ஹாமம் ஸ்ரீ நவகிரக ஓமம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவில் நிர்வாக குழுவின் சார்பில் கொடியேற்றம் கங்காணம் கொட்டுதல் நடைபெற்றது.

மாரியம்மன்க்கு கண் திறந்து சிறப்பு பூஜைகள் மாரியம்மன் வாகனத்தில் அலங்கரித்து குப்பா கவுண்டர் தெரு கோவிலிலிருந்து புறப்பட்டு ஆத்து மேடு வழியாகச் சென்று தர்மபுரி கடைவீதி பெரியார் சிலை அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக வாதிமேளம் கரகாட்டம் பம்பை ஆட்டம் கலந்து கொண்டு ஊர்வலத்தில் வழி முழுவதும் பக்தர்கள் மாரியம்மன்க்கு தேங்காய் உடைத்து வழிபட்டு தரிசனம் பெற்றனர்.

நேற்று இரவு 7 மணி அளவில் குப்பா கவுண்டர் தெரு, விநாயகர் கோயிலில் இருந்து 108 மூலிகை உடன் வாத்திய மேளத்துடன் ஊர்வலமாக மாரியம்மன் கோவிலில் யாகசாலையில் வைத்து யாக சாலை பூஜை நடைபெற்றது இதில் கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் யாகசாலையில் கலந்து கொண்டு வழிபட்டனர்.

கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது விழாக்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story