வீரட்டானேஸ்வரர் கோவிலில் யாகசாலை பந்தகால் முகூர்த்தம்

வீரட்டானேஸ்வரர் கோவிலில் யாகசாலை பந்தகால் முகூர்த்தம்

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.


திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

திருக்கோவிலுார் , கீழையூர், சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் கோவில் பாடல் பெற்ற ஸ்தலம். சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி மற்றும் மண்டபங்கள் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்களால் புனரமைக்கப்பட்டு திருப்பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 15ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

முன்னதாக நேற்று காலை யாகசாலை பந்தகால் முகூர்த்தம் நடந்தது. அதிகாலை 4:30 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு அபிஷேகம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், மகா கணபதி ஆவாகனம், யாகசாலை பூஜைகள், திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, முகூர்த்த கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி, வேத மந்திரங்கள் முழங்க முகூர்த்த கால் நடப்பட்டது. நகராட்சி தலைவர் முருகன் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள், இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள், அறங்காவல் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story