பட்டா வழங்க பல ஆண்டுகள் இழுத்தடிப்பு - கிராம மக்கள் சாலை மறியல்

பட்டா வழங்க பல ஆண்டுகள் இழுத்தடிப்பு - கிராம மக்கள்  சாலை மறியல்

சாலை மறியல் 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த உச்சிமலைகுப்பம், பலவக்கல், ராமாபுரம், கீழ்பாச்சல் உள்ளிட்ட கிராமங்களில் கல் உடைக்கும் தொழிலாளிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசாங்கம் குடும்ப அட்டை, மின் இணைப்பு உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்று பலமுறை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த அவர்கள் உச்சிமலை குப்பம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து தங்கள் கோரிக்கையான வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் குடியிருந்து வரும் பகுதியை ஜல்லி மெஷின் வைத்திருப்பவர்கள் ஆக்கிரமித்து தங்களுக்கு பாதை கூட விடாமல் அராஜகத்தின் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

Tags

Next Story