அரூரில் 75 ஆயிரத்திற்கு மஞ்சள் ஏலம்

அரூரில் 75 ஆயிரத்திற்கு மஞ்சள் ஏலம்

மஞ்சள் ஏலம்

அரூர் கச்சேரி மேட்டில் செயல்படும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மஞ்சள் ஏலம் விவசாயிகள், மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரூர் கச்சேரிமேட்டில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகின்றது இந்த விற்பனை கூடத்திற்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம் அதன்படி நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.

அரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட விவசாயிகள், மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். ஏலத் தில் விரலி மஞ்சள் குவிண்டால் 9,009, முதல் 19,550 வரையும், உருண்டை (கிழங்கு) மஞ்சள் குவிண் டால் 9,009 முதல் 17,109 வரையும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த மஞ்சள் 75 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

Tags

Next Story