தனியார் பள்ளியில் மஞ்சள் நிற நாள் கொண்டாட்டம்

தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மஞ்சள் நிறத்தை குறிக்கும் வகையில் மஞ்சள் நிற நாள் கொண்டாட்டம் நடைபெற்றது
ஈரோடு பள்ளிபாளையம் சாலை ராமமூர்த்தி நகரில் உள்ள, நந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மஞ்சள் நிற நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் இதில் பங்கேற்றனர் . மேலும் குழந்தைகளின் படைப்புகள் கலைத்திறன்கள் வெளிப்படுத்தும் வகையில், காய்கறிகள் ,மலர்கள் பல்வேறு வகையான பொம்மைகள் போல குழந்தைகள் வேடணிந்து வந்தனர். உணவுப் பொருள்கள், உடைகள் ,காய்கறிகள் ,மலர்கள், பொம்மைகள், ஆகியவை அனைத்தும் மஞ்சள் நிறத்திலேயே கண் கவரும் வகையில் அழகாக வரிசைப்படுத்தப்பட்டு இருந்தது. இதில் பள்ளியின் தலைவர் சி.என்.ராஜா சிறப்பான படைப்புகளை வழங்கிய மாணவ, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளியின் செயலாளர் நந்தி சி மோகன் இந்த நிகழ்வினை துவக்கி வைத்து, மாணவர்களின் படைப்புகளை பாராட்டி ,தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டுமென அவர்களுக்கு ஊக்கப்படுத்தினார். இதில் பள்ளியின் ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் முதல்வர் ராஜேஷ் செய்திருந்தார். மஞ்சள் நிற கலை படைப்புகளை காண குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story