உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் - வேளாண் துறை வழிகாட்டுதல்

உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் - வேளாண் துறை வழிகாட்டுதல்

உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய்

உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

பாபநாசம் வட்டாரத்தில் சுமார் 300 எக்டர் பரப்பளவில் உளுந்து பயிரிடப்பட்டுள்ளது. தற்பொழுது நிலவிவரும் அதிக வெப்பநிலை காரணமாக உளுந்தில் மஞ்சள் தேமல் நோய் பாதிப்பு ஏற்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது இதனை கட்டுப்படுத்த பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் பின்வரும் செய்தி குறிப்பினை தெரிவித்துள்ளார்.

நோயின் முதல் அறிகுறியாக இளம் இலைகளில் மஞ்சள் நிற புள்ளிகள் ஆங்காங்கே காணப்படும். பின்னர் இலைகள் முழுவதும் திட்டு திட்டாக ஒழுங்கற்ற வடிவத்தில் காணப்படும். சில சமயம் நோயுற்ற இலைகள் சிறுத்தும் சுருங்கியும் காணப்படும். நாளடைவில் மஞ்சள் நிறம் அதிகமாகி சில இலைகள் முழுவதும் மஞ்சள் நிறமாகும் நோய் தாக்கப்பட்ட செடிகள் தாமதமாக காய்ப்புக்கு வருவதுடன் குறைந்த எண்ணிக்கையில் காய்கள் காய்க்கும் நோய் முற்றிய செடிகளில் காய்களும் விதைகளும் மஞ்சள் நிறமாக மாறிவிடும் பயிரின் இளம் பருவத்தில் நோய் தோன்றினால் முழுவதுமாக மகசூல் இழப்பு ஏற்படும் மஞ்சள் தேமல் நோய் ஒரு வைரஸ் நோயாகும்.

இந்நோய் பெமிசீயா டபாசி என்ற ஒருவகை வெள்ளை ஈக்களினால் பரப்பப்படுகின்றது மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்பு இரகங்கள் அல்லது நோயினை தாக்கி வளரும் இரகங்களான வம்பன் 4 மற்றும் வம்பன்5 பயிர் செய்ய வேண்டும் வரப்போர பயிர்களாக 2 வரிசைகளில் மக்காச்சோளத்தை பயிரிட வேண்டும் ஏக்கருக்கு 5 என்ற அளவில் மஞ்சள் ஒட்டு புரியினை நட வேண்டும் நோயினால் தாக்கப்பட்ட செடிகளை ஆரம்பத்திலேயே பிடுங்கி அளித்து விட வேண்டும் ஒரு கிலோ விதைக்கு 5 மில்லி என்ற அளவில் இமிடாகுளோபிரிட் 600 எஃப் எஸ் உடன் விதைநேர்த்தி செய்ய வேண்டும் விதைத்த 30-வது நாள் டைமீத்தோயேட் 0.1 சதவீதம் இடைவெளி தெளிப்பு செய்திட வேண்டும் இவ்வாறு கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடிப்பதினால் மஞ்சள் தேமல் நோய் பாதிப்பில் இருந்து விடுபட்டு அதிக மகசூல் எடுக்கலாம் இவ்வாறு இவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story