ஏற்காடு : பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 3 ஓட்டல்களுக்கு அபராதம்

ஏற்காடு : பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 3 ஓட்டல்களுக்கு அபராதம்

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு 

ஏற்காட்டில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 3 ஓட்டல்களுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் அபராதம் விதித்தனர்.
ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. சுற்றுலா பயணிகள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி ஓட்டல்களில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் உரிய விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் படி கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தினார். இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் மற்றும் அலுவலர்கள் ஏற்காட்டில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு நடத்தினர். அப்போது 3 ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த 3 ஓட்டல்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர்.

Tags

Next Story