சேலம் ஏற்காடு விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அருள் எம்.எல்.ஏ. ஆறுதல்

சேலம் ஏற்காடு விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அருள் எம்.எல்.ஏ. ஆறுதல்

நலம் விசாரித்த எம்.எல்.ஏ 

ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களை எம்.எல்.ஏ அருள் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்தவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அருள் எம்.எல்.ஏ. மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர். காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது மாநகர் மாவட்ட தலைவர் கதிர்.ராசரத்தினம், பசுமைத்தாயக மாநில இணைச்செயலாளர் சத்ரியசேகர், சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story