ஏற்காடு மலைப்பாதை பஸ் விபத்து: எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல்

ஏற்காடு மலைப்பாதை பஸ் விபத்து: எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல்

ஏற்காடு மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்களை எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


ஏற்காடு மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்களை எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் கடந்த மாதம் 30-ந் தேதி சேலம் நோக்கி வந்த ஒரு தனியார் பஸ், 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில், விபத்தில் காயம் அடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று காலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நோயாளிகளுக்கு பழங்களை வழங்கியதோடு அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களை கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும் நிவாரண நிதியாக வழங்க வேண்டும். ஏனென்றால் விபத்தில் சிக்கியவர்கள் சாதாரண வேலைக்கு சென்று வந்தனர். தற்போது அவர்களால் வேலைக்கு செல்ல முடியவில்லை. எனவே, அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பஸ்சில் அளவுக்கு அதிகமாக 69 பயணிகளை ஏற்றியது தான் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். அதோடு, கோடை விடுமுறை என்பதால் ஏற்காட்டிற்கு கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.

Tags

Read MoreRead Less
Next Story